• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடையக்கூடிய நீர்ப்பாசன கமத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டம் (2018 - 2024)
- சிறிய குளங்கள், அணைக் கட்டுகள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றைக் கொண்ட சிறிய நீர்ப்பாசனங்களின் ஊடாக பெருமளவிலான வயல்கள் பயிர் செய்கைப் பண்ணப்படுவதோடு, கணிசமான விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை செய்து கொண்டுள்ளன. சிறிய நீர்ப்பாசனங்களின் மூலம் பயிர்ச்செய்கைபண்ணப்படும் இந்த வயற்காணிகள் காலநிலை மாற்றங்களினால் மிக இலகுவாக பாதிப்புக்குள்ளாகக் கூடியவை என்பதனால், உலர் வலய 11 மாவட்டங்கள் முழுவதும் பரந்துள்ள 53 முழுமையான "எல்லங்கா" குளமுறைமையின் கீழுள்ள 789 சிறிய குளங்களை காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் தாக்கங்களுக்கு ஏற்றவாறு புனரமைக்க வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த குளங்களின் ஊடாக பயிர்ச் செய்கைபண்ணப்படும் காணிகளின் வினைத்திறனை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு 140 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த முதலீட்டுடனான கருத்திட்டமொன்றை 2018 - 2024 உலக வங்கி நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.