• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வேலைகள் பற்றிய துறையில் செய்யப்பட்டுவரும் பாரிய முதலீடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறியச் செய்வித்தல்
- மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது சுமார் மூன்று தசாப்த காலமாக நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்குகின்றதோடு, புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னரும் 200 பில்லியன் ரூபா முதலீட்டினை செய்து மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலைகள் முடிக்கப்படாதிருந்த பாரிய நீர்த்தேக்க திட்டமொன்றான மொறகஹகந்த அத்துடன் கலுகங்கை நீர்த்தேக்களினதும் மஹகித்துல, மஹகிருல, அலிகொட்டபார, ஹந்தபானாகல, டயரபா, புஹுல்பொல போன்ற நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களினதும் நூற்றாண்டின் பாரிய நீர்ப்பாசன கருத்திட்டங்களான வடமத்திய பாரிய கால்வாய், வடமேல் பாரிய கால்வாய் மற்றும் மினிபே பாரிய கால்வாய் போன்ற நீர்ப்பாசன கருத்திட்டங்களினதும் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோன்று மொறகஹகந்த மின் உற்பத்தி நிலையம், உமாஓயா நிலக்கீழ் நீர் மின் உற்பத்தி நிலையம், நீர்த்தேக்கத்தின் மீது தாபிக்கப்படும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி நிலையம் என்பனவற்றின் நிருமாணிப்பு மூலம் எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் 1,000 மெகாவொட் தேசிய மின்சார முறைமைக்குள் சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை சேகரிப்பதற்காக நிருமாணிக்கப்பட்டுள்ள பழைய 'எல்லங்கா' கிராமிய குள முறைமைகள் பலவற்றை புனரமைத்து 2,400 கிராமிய குளங்களின் ஊடாக கிராமங்களுக்கு நீர்ப்பாசன மற்றும் குடிநீர் வசதிகளை வழங்கும் பாரிய நிகழ்ச்சித்திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பாரிய முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் பற்றி நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.