• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வளையக்கூடிய Hydrophobic உள்விழி லென்சுகள் 93,767 கொள்வனவு செய்தல்
- கண்களில் ஏற்படும் வெண்திரைகளை அப்புறப்படுத்தும் சத்திர சிகிச்சையின் போது கண்களுக்கு இடப்படும் 93,767 வளையக்கூடிய Hydrophobic உள்விழி லென்சுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வியை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் M/s. Hemas Pharmaceuticals (Pvt) Ltd. நிறுவனத்துக்கு 1,062.2 மில்லியன் ரூபாவுக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.