• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடசாலை புத்தகங்களை அச்சிடுதல்
- 2019 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள பாடசாலை புத்தகங்கள் 2018‑11‑04 ஆம் திகதியன்றுக்கு முன்னர் பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 419 வகையான 39.7 மில்லியன் பிரதிகள் கொண்ட பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் 3,473.1 மில்லியன் ரூபாவுக்கு 27 உள்நாட்டு அச்சு நிறுவனங்களுக்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.