• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறைந்த மின் பாவனையுடைய மின்சார பாவனையாளர்களுக்கு LED (Light Emitting Diode) மின் விளக்குகளை சலுகை விலைக்கு வழங்குதல்
- கேள்வி தரப்பு வலுசக்தி முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கிடையே வினைத்திறன்மிக்க LED மின்குமிழ்களின் பாவனையை ஊக்குவிப்பதற்கு சலுகை கடன் திட்டத்தின் கீழ் LED மின்குமிழ்களை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்திற்கு பத்து இலட்சம் LED மின்குமிழ்கள் கொண்ட பத்து தொகைகளை தொகையொன்று 169.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் வியட்நாமின் M/s. Rang Dong Light Source & Vacuum Flask கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.