• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பத்தலே நீர் பம்பு நிலையத்தை நிருமாணித்த
- நுகர்வோருக்கு மிகச் சிறந்த நீர்வழங்கல் சேவையொன்றை வழங்கும் நோக்கில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள அம்பத்தலே நீர் பம்பு நிலைய நிருமாணிப்பு கருத்திட்டமானது கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்டுள்ள துணைக் கருத்திட்டமொன்றாகும். இதற்கமைவாக, அம்பதலே நீர் பம்பு நிலையத்தை வடிவமைத்து நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,181.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மலேசியாவின் M/s. SALCON ENGINEERING BERHAD நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.