• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் 10 மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- 1,493 படுக்கைகளையும் 41 காவறைகளையும் கொணட பதுளை மாகாண பொது வைத்தியசாலையானது ஊவா மாகாணத்தின் கூடுதலான சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். இந்த வைத்தியசாலையில் விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சை சேவைகள் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் உதவி கிளினிக் சேவைகளுடன் கூடிய இருதய உடற்குழாய் ஆய்வுகூடமொன்றை நிருமாணிப்பதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அறுவை / மருத்துவ காவறை வசதிகளுடனும் இருதய நோய் சிகிச்சை வசதிகள் அதேபோன்று உத்தேச விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சை சேவைகள் பிரிவொன்றையும் தாபிப்பதற்கு புதிய10 மாடி கட்டடமொன்றை இந்த வைத்தியசாலை மனையிடத்தில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 3,958.2 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டுடன் இந்த 10 மாடிக் கட்டடத்தை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்துக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.