• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்டத்தை நிருமாணித்தல்
- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு என்பன சார்பில் 05 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணிக்கும் இரண்டாவது கட்டமாக அதன் இரண்டாம் மாடியிலிருந்து ஐந்தாம் மாடி வரை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் இரண்டாம் கட்டத்துக்கான நிருமாணிப்பு பணிகளை 1,224.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்துக்கும் மற்றும் மத்திய பொறியியல் சேவைகள் தனியார் கம்பனிக்கும் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.