• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Litro Gas Lanka Ltd. கம்பனியினால் எரிவாயு விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலின்டர்களை கொள்வனவு செய்தல்
- Litro Gas Lanka Ltd. கம்பனியினால் எரிவாயு விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்படும் பாதுகாப்பான வால்வுகளுடன் கூடிய 656,298 வெற்று LP எரிவாயு சிலின்டர்களை (பல்வேறுபட்ட அளவுகளைக் கொண்ட சிலின்டர்களில்) அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்தியாவின் M/s. Mauriya Udyog Ltd. நிறுவனத்திடமிருந்து 2,057.1 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு கொள்வனவு செய்யும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.