• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள இரண்டு யானைகளையும் தங்கவைப்பதற்காக யானைகள் தங்கும் நிலையமொன்றைத் தாபித்த
- உலக மரபுரிமையான சிங்கராஜ வனப்பகுதியில் தற்போது எஞ்சியுள்ள காட்டு யானைகள் இரண்டினாலும் இந்த வனப் பகுதிக்கு அருகாமையில் வசிக்கும் கிராமத்தவர்களுக்கு ஏற்படும் உயிர் சேதங்களும் சொத்துக்களுக்கான சேதங்களும் படிப்படியாக அதிகரித்துள்ளன. இந்த பின்னணியில் இரண்டு யானைகளினதும் பாதுகாப்பிற்கும் அதேபோன்று கிராமத்தவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்கும் துரிதமாக நடவடிக்கை எடுக்கும் தேவையின்பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு யானைகளையும் தங்கவைப்பதற்கு தங்குமிடமொன்றை நிருமாணிப்பதற்கு இந்த விலங்குகளுக்கு ஏற்ற சூழலுடன் கூடடிய கலவான தொலேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் பாறுகல பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 36 ஹெக்டெயார் விஸ்தீரணமுடைய நிலப் பிரதேசத்தை உடமையாக்கிக் கொள்ளும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.