• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெனியாய வாராந்த சந்தையை அபிவிருத்தி செய்தல்
- தெனியாய நகரத்துக்கு நாளொன்றுக்கு வருகைதரும் சுமார் 25,000 பேர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக தற்போது சேதமடைந்த நிலையிலுள்ள தெனியாய வாராந்த சந்தையை கடை அறைகள் 80-120 கொண்ட வர்த்தக தொகுதியொன்றாக புதிய பாதை முறைமைகளுடனும் சிறந்த துப்பரவேற்பாட்டு வசதிகளுடனும் விருத்தி செய்து அபிவிருத்தி செய்யும் பொருட்டு இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.