• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிதாக தாபிக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு வசதிகளை வழங்குதல்
- முன்னைய அம்பகமுவ பிரதேச சபை அதிகாரப் பிரதேசமானது அம்பகமுவ, மஸ்கெலிய மற்றும் நோர்வூட் என 03 புதிய அதிகார பிரதேசங்களாகவும் நுவரெலிய பிரதேச சபை அதிகார பிரதேசமானது நுவரெலியா, கொட்டகலை மற்றும் அக்கரபத்தனை என 03 புதிய அதிகார பிரதேசங்களாகவும் தமன்கடுவ அதிகாரப் பிரதேசமானது பொலன்நறுவை மாநகர சபையாகவும் பொலன்நறுவை பிரதேச சபையாகவும் புதிய 02 அதிகார பிரதேசங்களாகவும் பண்டாரகம பிரதேச சபை அதிகாரப் பிரதேசமானது பண்டாரகம மற்றும் மில்லனிய என 02 புதிய அதிகாரப் பிரதேசங்களாகவும் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு புதிய 10 உள்ளூராட்சி அதிகார சபைகளாக தாபிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு புதிதாக தாபிக்கப்பட்ட இந்த உள்ளூராட்சி அதிகாரசபைகளிடமிருந்து பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை துரிதமாக வழங்குவதற்கு இந்த உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு 540 மில்லியன் ரூபாவை திறைசேரியிடமிருந்து குறித்தொதுக்கிக் கொள்வதற்காக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.