• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தொழினுட்ப மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளல்
- உயர் தரம் வாய்ந்த உள்நாட்டு உற்பத்திகளை நாட்டில் விற்பனை செய்வதற்கான தொழில்முயற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று 'ஒரே நாடு ஒரே உற்பத்தி' (OTOT- One Tambon. One Product) என்பது தாய்லாந்தில் மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நாட்டில் சமுர்த்தி பயனாளிகளின் பொருளாதார பலத்தை விருத்தி செய்வதற்கான பலப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது தாய்லாந்தில் செயற்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து தொழினுட்ப மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தாய்லாந்து சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மைக்கும் இலங்கை சமூக வலுவூட்டல் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடும் பொருட்டு சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.