• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கெரவலபிட்டிய பிரதேசத்தில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பதற்காக காணியொன்றை குறித்தொதுக்குதல்
- இலங்கையில் அதிகரித்துவரும் மின்சார கேள்வியை ஈடு செய்வதற்காக இயற்கை எரிவாயுவை எரிபொருளொன்றாக பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பது மிக பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுடன் ஒன்றிணைந்த கருத்திட்டங்களாக 500 மெகாவொட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டினை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது கூடுதலான மின்சார கேள்வி நிலவும் கொழும்பு நகரம் உட்பட புறநகர் பிரதேசங்களுக்கு அண்மையில் தாபித்தல், இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு இறக்கும் முனைவிடத்தை நிருமாணிப்பதற்கு பொருத்தமான அமைவிடமாக இருத்தல், குளிரூட்டுவதற்கு நீர் பெற்றுக் கொள்வதற்கான ஆற்றல் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய காணி இருத்தல் போன்ற விடயங்கள் காரணமாக இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பதற்கு பொருத்தமான பிரதேசமாக கெரவலபிட்டிய பிரதேசம் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக கெரவலபிட்டிய பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான 110 ஏக்கர் காணியில் முறையான சுற்றாடல் மதீப்பீடொன்றை செய்ததன் பின்னர், உத்தேச இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.