• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை தொகை ஏற்றுமதியின் மீது நிலையான செஸ் வரி கட்டணமென்றை அறிமுகப்படுத்துதல்
- தற்போது தேயிலை தொகை ஏற்றுமதியின் மீது செஸ் வரி கணக்கிடப்படுவதோடு, இதற்கமைவாக கிலோ கிராம் ஒன்றிற்கு 10/- ரூபா அல்லது கொழும்பு தேயிலை ஏலத்தில் சராசரி விலைகளின் 2.5 சதவீதம் என்னும் இரண்டில் கூடிய பெறுமதியை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மாதாந்த அடிப்படையில் இது கணக்கிடப்படும். தற்போது தேயிலை ஏற்றுமதியாளர்களினால் தேயிலை கிலோ கிராம் ஒன்றிற்கு செலுத்தப்படும் செஸ் வரி கட்டணம் 20/- ரூபா ஆவதோடு, இதனை மாதாந்த அடிப்படையில் கணக்கிடுவதன் மூலம் தொகை விலையை முன்னதாகவே தீர்மானிப்பது கடினமாதல், ஏற்றுமதி விலைகள் முன்வைக்கப்படுதலில் தாமதம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தேயிலை ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுக்க வேண்டி நேர்ந்துள்ளது. இதற்கமைவாக, இதற்கு மாற்று வழியாக தேயிலை தொகை ஏற்றுமதியின் மீது கிலோ கிராம் ஒன்றிற்கு 10/- ரூபாவைக் கொண்ட நிலையான செஸ் வரி கட்டணமொன்றை அறிமுகப் படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.