• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவன சட்டத்தை திருத்துதல்
- பெருந்தோட்ட துறைக்கு தேவையான உயர் தகுதி வாய்ந்த தொழில்சார்பாளர்களை உருவாக்கும், தேர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் பெருந்தோட்ட முகாமைத்துவ பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தை மாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் 1979 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவன சட்டத்தை திருத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.