2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதாரம் மற்றும் மருத்துவ விஞ்ஞான துறை ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - பொது சுகாதாரம், தாதி கல்வி, சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரம், சுகாதார கொள்கை மற்றும் நிருவாகம், சமூக சுகாதாரம், கிராமிய மற்றும் நகர சுகாதார முகாமைத்துவம், சுகாதார சுற்றுலா தொழில், சுகாதார துறை சார்பில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பத்தை பயன்படுத்துதல், காலநிலை மாற்றங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சுகாதார துறையின் மனிதவள முகாமைத்துவத்தின் மேம்பாடு போன்ற சுகாதார மற்றும் மருத்துவ துறை சார்ந்த பணிகள் தொடர்பில் இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் பங்களாதேசின் Management and Training International Ltd. நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |