• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான பேரண்ட அரசிறை கட்டமைப்பு
- வினைத்திறனை அடிப்படையாக கொண்ட வழிமுறையினை பின்பற்றி 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் போது 2021 ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த மொத்த நிதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அடைவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 17 சதவீதம் வரை அரசாங்க வருமானத்தை அதிகரித்து கொள்ளல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதம் வரை அரசாங்கத்தின் மீண்டு வரும் செலவினத்தைப் பேணுதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.5 சதவீத மட்டத்தில் அரசாங்க முதலீட்டினை பேணுதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.5 சதவீதத்திற்கு வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை வரையறுத்தல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதத்தை விட குறைந்த மட்டத்தில் அரசாங்க கடன்களை பேணுதல் போன்ற குறியிலக்குகளை அடைவதற்கு இயலுமாகும் வகையில் தேசிய வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப் படுகின்றது. இதற்கமைவாக, அரசாங்கத்தின் நடுத்தவணைகால பேரண்ட அரசிறை கட்டமைப்பினுள் இனங்காணப்பட்டுள்ள குறியிலக்குகளை பூர்த்திசெய்வதற்கு அரசாங்கத்தின் முன்னுரிமை கருத்திட்டங்களை அறிந்துக் கொண்டு, இந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி ஏற்பாடுகளை வரிசை அமைச்சுக்களுக்கு குறித்தொதுக்குவதன் மூலம் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத்திட்டத்தை தயாரிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.