• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Millennium Challenge Corporation மற்றும் இலங்கை அரசாங்கம் என்பவற்றுக்கு இடையிலான மானிய மற்றும் அமுல்படுத்தல் உடன்படிக்கை
- பொருளாதார வளர்ச்சியின் மூலம் வறுமையை ஒழிப்பதற்காக ஐக்கிய அமெரிக்க குடியரசினால் செயற்படுத்தப்படும் Millennium Challenge Corporation வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவியினை பயன்படுத்துவது சம்பந்தமான பணிகளை பிரதம அமைச்சரின் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகமானது மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒருங்கிணைப்பின் கீழ் காணி நிருவாகம், போக்குவரத்து, கமத்தொழில் சார்ந்த விநியோகம், மின்சாரம் மற்றும் வலுசக்தி போன்ற துறைகளின் அபிவிருத்தி உட்பட, உயர் தொழினுட்ப பல்கலைகழகமொன்றை தாபிக்கும் மற்றும் பேலியகொடயிலிருந்து மாலம்பே வரை தூண்களின் மீது செல்லும் நெடுஞ்சாலையொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டங்களும் மேற்கொள்ளப் படவுள்ளன. இந்த கருத்திட்டங்களுள் போக்குவரத்து துறையின் அபிவிருத்தி கருத்திட்டத்திற்கும் காணி நிருவாக செயற்பாட்டிற்குமான கருத்திட்டத்திற்கும் அண்ணளவாக 450-500 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மானியத்தினை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதெனவும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Millennium Challenge Corporation வேலைத்திட்டத்தின் பிரதான முதலீடுகளின் தற்போதைய நிலைமை பற்றியும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.