• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர் கல்வி நிறுவனகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- ருகுணு பல்கலைக்கழகம், பிக்கு பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை உயர் தொழினுட்ப கல்வி நிறுவனம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 2,384.7 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.