• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுகத்திற்கும் பங்களாதேஷ் சிற்றகொங் துறைமுகத்திற்கும் இடையிலான கொள்கலன் கப்பல் போசிப்பு சேவையை தொழிற்படுத்தல்
- இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையில் கப்பற்துறை தொடர்புபட்ட இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இரு நாடுகளினதும் கப்பல் கூட்டுத்தாபனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. பங்களாதேசுக்கு சொந்தமான பிரதான துறைமுகமொன்றான சிற்றகொங் துறைமுகத்தில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் காரணமாகவும் ஆழமற்றதன் காரணமாகவும் பிரதான கப்பல் சேவைகளுக்குரிய கப்பல்கள் இந்த துறைமுகத்துக்கு செல்வதில்லை. ஆதலால், பங்களாதேஷின் ஏற்றுமதி, இறக்குமதி கப்பற் பொருட்கள் பெரும்பாலானவை சிங்கபூர், கொழும்பு மற்றும் மலேசிய துறைமுகங்கள் ஊடாக பொதுவான போசிப்பு கொள்கலன்கள் கொண்டு செல்லும் கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும். இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையில் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் காரணமாக ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது போசிப்பு போக்குவரத்து சேவைக்கு இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு முன்னுரிமை கிடைக்கப்பெற்றுள்ளமையினால், இலங்கை கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கப்பலொன்றை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் மேற்போந்த உடன்படிக்கையின் சாதக நிலைமையினை அடைவதற்காக கூட்டு பங்குடைமை அடிப்படையில் பொருத்தமான தரப்பொன்றை தெரிவுசெய்யும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.