• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மினுவங்கொட பிரதேசத்தில் 1,500 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் கோபுரமொன்றை நிருமாணித்தல்
- கம்பஹா, அத்தனகல்ல, மினுவங்கொட ஒன்றிணைந்த நீர் வழங்கல் கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக மினுவங்கொட பிரதேசத்தில் நிருமாணிக்கப்படவுள்ள 1,500 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் கோபுரமொன்றையும் அனுப்பீடு மற்றும் விநியோக முறைமை என்பன சார்பில் பிரதான குழாய்களை பதிப்பதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் M/s. Finite Lanka (Pvt.) Ltd. நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.