• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி தெமுவாவத்த இரத்தினக்கல் வீதியை சர்வதேச இரத்தினக்கல் வீதியொன்றாக அபிவிருத்தி செய்தலும் இரத்தினக்கல் கோபுரத்தை நிருமாணித்தலும்
- இரத்தினபுரி நகரத்தினுள் மாணிக்ககல் மற்றும் ஆபரணங்கள் தொழிலுக்கு தேவையான சகல சேவைகளையும் ஒரே இடத்தில் வினைத்திறனுடன் பெற்றுக் கொள்வதற்கும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் சார்பில் கொள்வனவு செய்பவர்களை கவர்ந்திழுப்பதற்கு விசேடமான மத்திய நிலையமொன்றை நிருமாணிக்கும் பொருட்டும் இரத்தினபுரி தெமுவாவத்த இரத்தினக்கல் வீதியை சர்வதேச இரத்தினக்கல் வீதியொன்றாக அபிவிருத்தி செய்தவதற்கும் இரத்தினக்கல் கோபுரமொன்றை நிருமாணிப்பதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இரத்தினபுரி தெமுவாவத்த வீதியில் 22 பேச்சஸ் கொண்ட லைமேவத்த என்னும் காணியிலிருந்து இரத்தினக்கல் கோபுரமொன்றாக 4 மாடி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கும் இதில் வர்த்தக நிலையங்கள். மாணிக்க கற்கள் இரசாயனகூடம், வங்கி வசதிகள், ஏற்றுமதி வசதிகள் மற்றும் சுங்க வசதிகள் என்பவற்றை தாபிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.