• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துதல்
- அரசாங்கத்தின் கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தில் முன்னுரிமை அங்கமொன்றான டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதற்காக "டிஜிட்டல் இலங்கையை" உருவாக்கவேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சேவைகளை பெறுபவர்களுக்கு அகல அலைவரிசை இணைப்பொன்றை வழங்குவது அத்தியாவசிய காரணியொன்றாக கண்டறியப்பட்டுள்ளது. அகல அலைவரிசை இணைப்பினை விரிவுப்படுத்துவதற்கு மிக பொருத்தமான வழிமுறையாக சேவை பெறுநர்கள் இருக்கும் இடத்திற்கு இழை ஒளியியல் மூலம் இந்த சேவையினை வழங்குவது ஏற்றதாக இருந்தாலும் அதற்கு கூடுதலான செலவினை ஏற்கவேண்டியுள்ளது. தொழினுட்ப விருத்தியுடன் மின்சாரம் மற்றும் அகல அலைவரிசை சேவைகள் ஆகிய இரண்டு சேவைகளையும் ஒரே உட்கட்டமைப்பு வசதியொன்றின் ஊடாக பகிர்நது விநியோகிக்கும் சாத்தியம் நிலவுகின்றது. இதற்கமைவாக மின்சார விநியோக உரிமம் வழங்கப்பெற்றவர்களும் உரிமம் வழங்கபெற்ற தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்குபவர்களும் பரஸ்பரம் தங்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பகிர்ந்து கொள்வதன் ஊடாக மின்சாரம் அதேபோன்று அகல அலைவரிசை இணைப்பு வசதிகளையும் உயர் தொழினுட்ப தரம்வாய்ந்த குறைந்த செலவின் கீழ் விரிவுப்படுத்தும் சாத்தியம் நிலவுகின்றது. இதுபற்றி ஆராய்ந்து பிரேரிப்புகளை சமர்ப்பிக்கும் பொருட்டு துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினாலும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.