• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாடகை வீட்டு சந்தையின் முறையான செயற்பாட்டை உறுதிப்படுத்துதல்
- நகரமயமாதல் காரணமாக நகரத்தை நோக்கி இடம்பெயர்பவர்களுக்கு, தொழில் செய்பவர்களுக்கு மற்றும் இளைய குடும்பங்களுக்கு ஏற்க கூடிய விலையில் வாடகை வீடுகளை வழங்கும் தேவையினை பரிசீலனை செய்து வாடகை வீட்டு சந்தைக்கான பணிகளை மிக முறையாக மேற்கொள்ளும் பொருட்டு தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்து குழுவின் சிபாரிசின் பிரகாரம் வாடகை வீட்டு சந்தையை ஒழுங்குறுத்துதல், வாடகை வீடுகள் வழங்குதலை அதிகரித்தல் மற்றும் பெண்கள் உட்பட முதியோர்களுக்கு ஏற்ககூடிய விலையில் வாடகை வீடுகளை நிருமாணித்தல் போன்ற விடயங்களின் பால் கவனம் செலுத்தி வாடகை வீட்டு சந்தையின் முறையான செயற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சட்டங்களை வரையும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.