• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் துறையில் ஈடுபடுகின்ற தனியார் துறையினருக்கு வசதிகளை செய்தல்
- கமத்தொழில் துறையில் உயர் வினைத்திறனுடன் செயலாற்றுவதற்கும் கமத்தொழில் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தனியார் துறையின் பங்களிப்பினை பெற்றுக் கொள்ளும் தேவையின் பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தக சூழலில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கும் அதேபோன்று உயர் தரம் வாய்ந்த கமத்தொழில் உற்பத்திகள் நுகர்வோருக்கு சென்றடைவதற்காகவும் கமத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறைக்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக அமைச்சுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழுவொன்றைத் தாபிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.