• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க - தனியார் ஒத்துழைப்பு சார்பில் உதவுவதற்கு தேவையான கட்டமைப்பினை விருத்தி செய்தலும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்தலும்
- பலம்மிக்க அரசாங்க - தனியார் ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் மூலம் நேரடி வெளிநாட்டு முதலீட்டினை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு அரசாங்க - தனியார் ஒத்துழைப்பு பற்றிய முகவராண்மையானது (NAPPP) தாபிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தினால் ஏற்கனவே சுமார் 35 அரசாங்க - தனியார் ஒத்துழைப்பு கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்க - தனியார் ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்தாசை நல்குவதற்கு உலக வங்கி நிதியின் கீழ் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்கும் இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்குமாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.