• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவள அபிவிருத்தி கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதி பெற்றுக் கொள்தல்
- தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அறிவுடன் கூடிய மனித வளத்திற்கு பொருளாதாரத்தில் உருவாகிவரும் கேள்வியை ஈடு செய்வதற்கு விஞ்ஞான மற்றும் தொழினுட்ப கல்வியின் பால் கூடிய கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பொருட்டு 165 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த முதலீட்டில் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவள அபிவிருத்தி கருத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் மூலம் களனி, ரஜரட்ட, சப்பிரகமுவ பல்கலைக்கழகங்களில் 03 தொழினுட்ப பீடங்களும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்றும் தாபிக்கப்படவுள்ளன. இதன் மூலம் தற்போதைய தொழிற்சந்தைக்கு ஏற்ற திறன்களைக் கொண்ட நவீன தொழினுட்ப அறிவுடன் கூடிய தொழில்முயற்சி தொடர்பில் ஊக்கமுள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 145 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட வௌிநாட்டு நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு உரியதான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.