• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில் தேவையான தொழினுட்ப உதவியினை வழங்குதல்
- நகர அபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பில் சாத்தியத்தகவாய்வுகளை மேற்கொள்தல், விரிவான திட்டங்களைத் தயாரித்தல், கருத்திட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்தல், செயற்படுத்துதல் தொடர்புபட்ட நிறுவனங்களின் ஆற்றல்களை விருத்திசெய்வதன் மூலம் கருத்திட்டங்களின் தயார்படுத்தல் பணிகளை பலப்படுத்துவது உத்தேச நகர கருத்திட்ட தயார்படுத்தல் வசதி மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் 25 இரண்டாம் நிலை நகரங்களை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டங்களினதும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் 04 மூலோபாய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டங்களினதும் தயார்படுத்தல் வினைத்திறன் மேம்படுத்தப்படும். இதன் பொருட்டு 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட உதவித்தொகையொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.