• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெண்கள் நலன் சம்பந்தமான கணக்கெடுப்பு - 2018/2019
- பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பலப்படுத்துதல் போன்றவற்றிற்கான ஏற்பாடுகள் அரசியலைமைப்பின் ஊடாகவும் அதேபோன்று வேறு பல சட்டங்களின் ஊடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைவாக, பெண்களை பலப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் பல்வேறுபட்ட அரசாங்க மற்றும் அரசாங்கசார்பற்ற அமைப்புகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. ஆயினும், இலங்கை தொழிற் சந்தையில் பெண்கள் தொழிலில் ஈடுபடுதல் குறைந்த நூற்றுவீதத்தை எடுத்தல், பெண்களுக்கெதிரான வன்முறை, வீட்டு வன்முறை போன்ற விடயங்கள் சம்பந்தமாக உத்தியோகபூர்வமற்ற புள்ளிவிபரங்கள் சமூக மயப்படுத்தப்படுவதனால் இலங்கை சமூகத்தில் பெண்கள் முகங்கொடுக்கும் உண்மை நிலைமை பற்றி அறிந்து கொள்வதற்கு முறையான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 26.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை பயன்படுத்தி தேசிய மட்டத்தில் பெண்களின் நலன் தொடர்பிலான கணக்கெடுப்பு ஒன்றை தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடாத்துவதற்கும் அதன் அறிக்கையினை வௌியிடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.