• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர் மூலவளங்களின் தரத்தை பின் ஆய்வு செய்யும் கருத்திட்டம்
- கமத்தொழில் செயற்பாடுகளின் போது களை கொள்ளிகள் மற்றும் இரசாயன பொருட்கள் பரவலாக பாவிக்கப்படுவதன் காரணமாக நீர் மூலவளங்களிலுள்ள நீரின் தரம் குறைவடைந்துள்ளதோடு, இந்த நிலைமை மனிதர்கள் உட்பட உயிரினங்களின் செயற்பாடுகளுக்கு பிரதிகூலமான விதத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. அதேபோன்று தற்போது இலங்கையில் சில பிரதேசங்களில் காணக்கூடியதாகவுள்ள காரணம் தெளிவாக கண்டறியப்படாத சிறுநீரக நோய் தொடர்பிலும்கூட குடிநீரின் தரம் சம்பந்தமான பிரச்சினை காரணமாய் அமைந்துள்ளதெனவும் தெரியவந்துள்ளது. இந்த நிலைமைக்கு மாற்று வழியாக நீர் மூலவளங்களில் உள்ள நீரின் தரத்தை ஆய்வு செய்வதன் மூலம் நீர் மாசடைவதற்கு ஏதுவாய் அமையும் காரணிகளை இனங்காண்பதுவும் இந்த நிலைமைக்கு மாற்று வழிகளை செய்வதுவும் அத்துடன் இதனால் ஏற்படும் தாக்கம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் அறிய செயவிக்கவும் வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு "நாட்டினுள் காணப்படுகின்ற நீர் மூலவளங்களின் தரத்தை பின் ஆய்வு செய்யும் கருத்திட்டத்தை" 2019 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை இரண்டு வருட காலப்பகுதிக்குள் 44.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவினை ஏற்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.