• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வட மாகாணத்தின் நிலைபெறு கடற்றொழில் அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
– இலங்கையின் கடற்பரப்பில் சுமார் 2/3 வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கு உரியதாவதோடு, இந்த பிரதேசங்களில் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பிரதான கைத்தொழில் ஒன்றாக கடற்றொழில் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த பிரதேசங்களில் கடற்றொழிலை மேம்படுத்துவதற்கு அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் அடங்கலாக முழுமொத்த உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டு 158 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட நிதியுதவியினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன் கீழ் பருத்தித்துறையிலும் பேசாலையிலும் 02 கடற்றொழில் துறைமுகங்ளையும் யாழ்ப்பாணம் மண்டைதீவில் நங்கூரமிடும் இடமொன்றைன்யும் நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் 08 படகுத் துறைகளையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 படகுத் துறைகளையும் கிளிநொச்சி மாவட்டத்தில் 03 படகுத் துறைகளையும் விருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கடற்றொழில் துறைமுகங்கள், நங்கூரமிடும் இடங்கள் மற்றும் படகுத் துறைகள் ஆகியவற்றை நிருமாணித்து, அபிவிருத்தி செய்தல், நீர் வாழ் உயிரினங்களின் வளர்ப்பினை அபிவிருத்தி செய்தல் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி ஆகிய பிரதான 03 பிரிவுகளின் கீழ் செயற்படும் இந்த கருத்திட்டத்திற்கு மதியுரை கம்பனிகளை தெரிவுசெய்வதற்கான உரிய பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.