• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமான பயணத்தின் போதான களியாட்ட முறைமை சார்பில் மொத்த உள்ளடக்கமும் விரிவான தகவல்களும் கொண்ட சஞ்சிகைகளை வழங்குவதற்கான கேள்வி
– ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் கம்பனியின் விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தக்கூடிய வசதிகள் தொடர்பிலான கைநூல்களையும் தகவல்கள் கொண்ட சஞ்சிகைகளையும் வழங்குவதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2018-10-01 ஆம் திகதியிலிருந்து 03 வருட காலப்பகுதிக்கு 5.92 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s. Inflight Dublin Ltd. கம்பனிக்கு வழங்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.