• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிருமாணிப்புகளை ஆரம்பித்தல்
- ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத் தொகுதியை நிருமாணிக்கும் கருத்திட்டத்தை சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு கருத்திட்டமொன்றாக நடாத்திச் செல்வதற்கும் அதன் நிருமாணிப்பு பணிகளுக்காக இலங்கை கடற்படையை ஈடுபடுத்துவதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பொன்றுக்கு அமைவாக இலங்கை கடற்படையை கொண்டு நிருமாணிக்க முடியாத சில வேலைகளை வெளிவாரி தரப்பினர்களின் ஊடாக செய்து கொள்ளும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைவாக, ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டடத் தொகுதி நிருமாணிப்பு கருத்திட்டத்திற்கான நிலக்காலிடல் தொடர்புபட்ட ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் 99.67 மில்லியன் ரூபாவுக்கு M/s. Nawaloka Piling (Pvt.) Ltd. கம்பனிக்கு வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.