• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரி சலுகைகளை வழங்குவதற்காக உரிய வரி சட்டங்களை திருத்துதல்
- அரசாங்க வருமானங்களை நிலையாக பேணும் பொருட்டு பெறுமதி சேர்க்கப்ப்ட வரி (VAT) சட்டம், தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT) சட்டம், பொருளாதார சேவைகள் கட்டண (ESC) சட்டம் ஆகிய சட்டங்களை திருத்துவதற்கு அசை்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் பல்வேறுபட்ட தரப்பினர்களினால் செய்யப்பட்டுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, விதிக்கப்பட்ட சில வரிகளை நீக்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மருத்துவ ஆலோசனை கட்டணம், மருத்துவ ஆலோசனை நாடல் மற்றும் மருத்துவ தொழில் சார்பாளர்களுக்கு செலுத்தப்படும் கட்டணம் என்பவற்றின் மீது விதிக்கப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை நீக்குதல் 2017 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்டுள்ள நிருமாணிப்பு உடன்படிக்கைகளின் கீழ் வழங்கப்படும் நிருமாணிப்பு சேவைகளை தேசத்தை கட்டியெழுப்பும் வரியிலிருந்து விலக்களித்தல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் மாற்றப்படாத அந்நிய செலாவணி இலாபத்தினை பொருளாதார சேவைகள் கட்டணத்திலிருந்து விலக்களித்தல் என்பன பொருட்டு உரிய சட்டங்களை திருத்தும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.