• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்காக புகையிரத என்ஜின்களை (Locomotive Engines) கொள்வனவு செய்தல்
- இலங்கையில் நகரப் பிரதேசங்களில் ஒன்றுசேரும் திண்மக் கடிவுகளை முகாமிப்பது பிரதான பிரச்சினையாக நிலவுகின்றதோடு, இதற்கு தீர்வொன்றாக நகர திண்மக் கழிவுகளை இடும் பொருட்டு புத்தளம், அறுவக்காலு பிரதேசத்தில் பாதுகாப்பான நில நிரப்பு பிரதேசமொன்றை ஏற்பாடு செய்வதற்கான கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் களனியவிலிருந்து அறுவக்காலு வரை புகையிரதம் மூலம் திண்மக்கழிவுகளை கொண்டு செல்லப்படவுள்ளதோடு, இதன் பொருட்டு 04 புகையிரத என்ஜின்களையும் 34 கொள்கலன்களை காவிச் செல்லும் வண்டிகளையும் 94 கொள்கலன் பெட்டிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கமைவாக இந்த நோக்கத்திற்குத் தேவையான 04 புகையிர எஞ்சின்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுின் பிரகாரம் 8.27 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு சீனாவின் M/s.Dongfang Electric International Corporation நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.