• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளில் PET CT SCAN இயந்திரங்களை செயற்படுத்துவதற்காக இலங்கையில் CYCLOTRON இயந்திரமொன்றை நிறுவுதல்
- மனித உடலில் இழையங்கள் மற்றும் உறுப்புக்களின் செயற்பாடுகளை தெரிந்து கொள்வதற்கு PET CT SCAN இயந்திரத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, அத்தகைய பரிசோதனைகளுக்கு FDG 18 என்னும் ஊடுகதிர் மருந்தானது பயன்படுத்தப்படும் இந்த ஊடுகதிர் மருந்தை உற்பத்தி செய்வதற்கு CYCLOTRON இயந்திரம் தேவைப்படும். புற்றுநோயின் அதிகரித்து செல்லும் தன்மையையும் கட்டுப்பாட்டில் உள்ள நிலைமையையும் அவதானித்தல் உட்பட புற்றுநோயாளர்களுக்கு சரியான சிகிச்சையினை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு PET CT SCAN இயந்திரம் அத்தியாவசியமானதாகும். தற்போது இலங்கையில் தனியார் வைத்தியசாலையொன்றில் PET CT SCAN இயந்திரம் உள்ளதோடு, இதன் மூலம் பரிசோதனை அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு சுமார் 150,000/- ரூபா அறவிடப்படுகின்றது. இதன் போது பயன்படுத்தப்படும் FDG 18 என்னும் ஊடுகதிர் மருந்துக்காகவும் அதிக தொகை செலவுசெய்ய வேண்டியுள்ளது. இலங்கை தேசிய வையத்தியசாலையில் PET CT SCAN இயந்திரமொன்று தாபிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் இத்தகைய இயந்திரமொன்று மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் தாபிக்கப்படும். இந்த இயந்திரங்கள் சார்பிலும் எதிர்காலத்தில் FDG 18 என்னும் ஊடுகதிர் மருந்து தேவைப்படும். இலங்கையிலுள்ள PET CT SCAN இயந்திரங்களை வெற்றிகரமாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கு நாட்டில் CYCLOTRON இயந்திரமொன்று இருப்பது அத்தியாவசியமானதாகும். இதற்கு மாற்று வழியாக குறித்த காலப்பகுதியின் பொருட்டு கொள்வனவு செய்யும் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு உட்பட்டு, இலங்கையில் CYCLOTRON இயந்திரமொன்றைத் தாபிப்பதற்கான பிரேரிப்பு M/s.Access International (pvt) Ltd., நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்பிலுள்ள முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த கருத்திட்டப் பிரேரிப்பை மதிப்பிடுவதற்கும் இது தொடர்பில் இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்குமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.