• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1976 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவன சட்டத்தை திருத்துதல்
- மனிதவள முகாமைத்துவ துறையில் தொழிற் தகைமைகளை பூர்த்தி செய்த முழுநேர உறுப்பினர்கள் சுமார் 1,500 பேர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவனமானது 1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இது 1976 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவன சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பெயரை "பட்டயம் பெற்ற இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவனம்" என பதிலீடு செய்து இலங்கை ஆளணி முகாமைத்துவ நிறுவன சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.