• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஹஜ் சட்டம்
- ஆண்டொன்றில் ஹஜ் யாத்திரையில் ஈடுபடுவதற்கு 7,000 தொடக்கம் 10,000 வரையிலான இஸ்லாம் பக்தர்கள் முஸ்லிம் மத, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்கின்றனர். ஆயினும், ஹஜ் யாத்திரை தொடர்பில் இலங்கைக்கு வருடாந்தம் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளின் எண்ணிக்கை 2,200 தொடக்கம் 3,400 இற்கு இடைப்பட்ட எண்ணிக்கைக்குள் வரையறுக்கப்படுகின்றமையினால் யாத்திரிகர் களையும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களையும் தெரிவு செய்வதும் மிக கடினமான பணியொன்றாகவுள்ளது. ஆதலால், ஹஜ் யாத்திரை சம்பந்தமான பணிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் பொருட்டு ஹஜ் சட்டமொன்று வரையப்பட வேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சட்டங்களை ஆக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.