• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக 'கிராமசக்தி' வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை சமூகமயப்படுத்தல்
- அதிமேதகைய சனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படுத்தப்படும் 'கிராமசக்தி' என்னும் சமூக திட்டத்தை சமூகமயப்படுத்துவதற்கு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்டுவரும் மாதிரிக் கிராம நிகழ்ச்சித்திட்டத்தை பயன்படுத்த இயலுமென்பதோடு, இதன் மூலம் கிராமிய மக்களை கூட்டாக பலப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆற்றல் கிடைக்கப்பெறும். இதற்கமைவாக மாதிரிக் கிராமங்களை மையப்படுத்தி 'கிராமசக்தி' மக்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.