• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டான தேசிய பொலிஸ் கல்லூரியில் கரப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டு மைதானங்களை நிருமாணித்தல்
- பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆற்றல், திறன், எண்ணம் மற்றும் தொழில் திறன்களை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு, தேசிய பொலிஸ் கல்லூரி தாபிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் நாளாந்தம் நடாத்தப்படும் 05 பயிற்சி பாடநெறிகளில் சுமார் 300 பயிலுநர்கள் கலந்து கொள்வதோடு, அவர்களில் பெரும்பாலானோர் இங்கு தங்கியிருந்து பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த பயிலுநர்கள் ஓய்வாக இருக்கும் காலப்பகுதியில் அதனை பயனுள்ள விதத்தில் கழிப்பதற்காக விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் இதன் பொருட்டு வசதிகளை செய்வதற்காக கரப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டு மைதானங்கள் இரண்டினை நிருமாணிக்கும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.