• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரித்தல்
- உலர்வலய விவசாயிகளுக்கிடையே மிகவும் பிரசித்தமான பெரிய வெங்காய பயிர்ச்செய்கையானது 2014 ஆம் ஆண்டளவில் 7,000 ஹெக்டெயார் கொண்ட பிரதேசத்திற்கும் கூடுதலாக பரவிக் காணப்பட்டிருந்த போதிலும் சந்தையில் நிலவிய விலை மாற்றங்கள் காலநிலை நிலைமைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டளவில் 2,000 ஹெக்டெயார் வரை அது குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விவசாயிகளின் பெரிய வெங்காய விதைகளை சந்தைப்படுத்தும் ஆற்றலின்மை, பெரிய வெங்காய பயிர்ச் செய்கையிலிருந்து விவசாயிகள் தவிர்ந்திருப்பதைத் தடுத்தல் மற்றும் உள்நாட்டு விதை உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் மீது அரசாங்கமானது அதன் கவனத்தை குவித்துள்ளது. அதற்கிணங்க, உள்நாட்டு பெரிய வெங்காய விதை உற்பத்தியாளர்களிடம் கிடைக்கக்கூடிய விதை இருப்புகளிலிருந்து 5,000 கிலோ விதைகளை கொள்வனவு செய்யும் பொருட்டும் மேலும் 2,000 கிலோ பெரிய வெங்காய விதைகளை கொள்வனவு செய்து அவற்றை அடுத்த பருவகாலத்தில் ஏற்படும் விதை தேவைப்பாடு கருதி களஞ்சியப்படுத் துவதற்கென அரசாங்கம் சார்பில் 2018 ஆம் ஆண்டின் சிறுபோக காலத்தில் புதிதாக 1,000 ஹெக்டெயார் காணிகளில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் பொருட்டும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கிலோ ஒன்றுக்கு 70/- ரூபாவிலிருந்து 80/- ரூபா வரையான விலையொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு தலையீடு செய்து அதற்கிணங்க இறக்குமதி வரிகளை திருத்தும் பொருட்டும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.