• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"கமத்தொழில் நீர் விளைவுப் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான புத்தாக்க தொழினுட்பம்" மற்றும் "முன்மாதிரியான விவசாய விரிவாக்கல் மாதிரிகள்" ஆகிய செயலமர்வுகளை இலங்கையில் நடாத்துதல்
- உறுப்பு நாடுகளின் கைத்தொழில் மற்றும் விவசாய துறைகளிலான விளைவு பெருக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆசிய விளைவுப் பெருக்க அமைப்பினாலும் கமத்தொழில் அமைச்சினாலும் கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்ட "கமத்தொழில் நீர் விளைவுப் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான புத்தாக்க தொழினுட்பம்" மற்றும் "முன்மாதிரியான விவசாய விரிவாக்கல் மாதிரிகள்" தொடர்பான இரு செயலமர்வுகளை இலங்கையில் நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உறுப்பு நாடுகளுக்கு பொருந்தும், ஆரோக்கிய நீர்வளங்கள் முகாமைத்துவம் நோக்கிய ஊக்கப்படுத்தலுக்கான "கமத்தொழில் நீர் விளைவுப் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான புத்தாக்க தொழினுட்பம்" தொடர்பில் 2018 07 23 ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்து 2018 07 27 ஆம் திகதிவரையான 5 நாள் செயலமர்வொன்றையும் "முன்மாதிரியான விவசாய விரிவாக்கல் மாதிரிகளும் முறைமைகளும்" பற்றிய ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான "முன்மாதிரியான விவசாய விரிவாக்கல்கள்" தொடர்பில் 2018 09 17 ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்து 2018 09 21 ஆம் திகதிவரையான 5 நாள் செயலமர்வொன்றையும் இலங்கையில் நடாத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.