• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு சபை சட்டத்தை திருத்துதல்
- தற்கால போக்குகளுடன் பொருந்துமாறு 1973 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு சபை சட்டத்தை இற்றைப்படுத்தும் நோக்குடன் தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை சட்டமாக இச்சட்டத்தின் தலைப்பினை திருத்துவதற்கென அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள கமத்தொழில் சமூகத்தினதும் நிறுவனங்களினதும் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தில் செய்யப்பட வேண்டிய மேலதிக திருத்தங்களை உள்ளடக்கி சட்டமூலமொன்றை வரையும் பொருட்டும் அதனை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் அச்சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.