• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க துறை சார்ந்த பதவியணி பற்றிய 2018 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான அறிக்கை
- அமைச்சரவையினால் முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, சகல அரச நிறுவனங்களிலும் உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்பு, இடமாற்றங்கள், பதவி வெறிதாக்கம், பதவி நீக்கம், இளைப்பாறுகை, பதவி விலகல் மற்றும் இறப்பு காரணமாக அரசதுறை சார்ந்த பதவியணியில் இடம்பெற்றுவரும் மாற்றங்களானவை இற்றைப்படுத்தப் பட்டு பேணப்பட வேண்டுமென்பதுடன் அத்தகைய தகவல்களானவை பரிசீலனையின் பொருட்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளன. நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மாண்மிகு மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்புக்கு இணங்க, 2018 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டின் போது 9,851 ஆளணியினர் அரசதுறைக்கு புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் இளைப்பாறுகை, பதவி விலகல், பதவி வெறிதாக்கம், பதவி நீக்கம் அல்லது இறப்பு காரணமாக 7,755 அரச உத்தியோகத்தர்கள் பதவிகளைத் துறந்துள்ளனர். தவிர, அங்கீகரிக்கப்பட்ட பதவியணிக்கு புறம்பாக 7,840 பேர்களை மாகாண சபைகள் தொழிலுக்கு அமர்த்தியுள்ளதுடன் சம்பளம் தொடர்பான தேசிய கொள்கையொன்றுக்கு இணங்கியொழுகுவதற்கு சகல அரசதுறை நிறுவனங்களுக்குமான தேவைப்பாடும் இனங்காணப்பட்டுள்ளது. அமைச்சரவைக் குறிப்பின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அங்கீகரிக்கப்பட்ட பதவியணிக்கு புறம்பாக உரிய அங்கீகாரமின்றி ஊழியர்களை ஆட்சேர்த்தல் சார்பில் நிறுவனத் தலைவர்கள் பொறுப்புக்கூறலை கொண்டிருக்கும் விடயம் பற்றியும் அமைச்சரவையினால் வலியுறுத்தப்பட்டது.