• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர் தொழினுட்ப தன்னியக்க இயந்திர சாதனம் தொடர்பில் துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி வரி அறவீட்டு சலுகைகளை வழங்குதல்
- உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழிலின் உற்பத்திச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் உயர் தொழினுட்ப தன்னியக்க இயந்திர சாதனம் தொடர்பில் செலுத்தவேண்டிய துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி வரியில் 75 சதவீத வரிச் சலுகையொன்றை வழங்குவதற்கென 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமானநிலைய அபிவிருத்தி வரி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.