• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"பாதுகாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்" சட்டமூலம்
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு அவர்களுடைய தொழில்முயற்சிகளை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான கடன் தொகைகளை பெற்றுக் கொள்ளும் போது அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் பெரும் பகுதியை காப்பீடாக வைப்பதற்கு இயலுமாகும் வகையில் 2009 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பாதுகாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டத்தை திருத்தி புதிய சட்டமொன்றை வரைவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தேச சட்டமூலத்திற்கு ஒருங்கிணைவாக காலவிதிப்பு கட்டளைச் சட்டம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டு கட்டளைச் சட்டம், ஈட்டு கட்டளைச் சட்டம், 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி குத்தகைச் சட்டம், 1990 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டு சட்டம், 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் மற்றும் ஆவண பதிவு கட்டளைச் சட்டம் ஆகிய சட்டங்களை திருத்துவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த சட்டங்களைத் திருத்துவதற்கும் இதன் பொருட்டு வரையப்பட்டுள்ள திருத்த சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப் பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.