• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி அமைச்சின் 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
- 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க, அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக பாராளுமன்றமும் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கையொன்றை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கமைவாக, இந்த தகவல்கள் உள்ளடக்கப்பட்ட நிதி அமைச்சின் 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.