• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மண்ணெண்ணெய் விலையை குறைத்தல்
- உலக சந்தையில் நிலவும் உயர் விலைகளுக்கு சமமாக சலுகை விலையின் கீழ் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையை குறிப்பிட்ட அளவில் அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் தங்களுடைய படகுகள் / இயந்திரங்கள் சார்பில் எரிபொருளாக மண்ணெண்ணெய் பயன்படுத்தும் மீனவர்களினாலும் அதேபோன்று வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் பயன்படுத்தும் குறைந்த வறுமானம் பெறுபவர்களினாலும் செய்யப்பட்ட கோரிக்கையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 101/- ரூபா வரை அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலையை 70/- ரூபா வரை குறைக்கும் பொருட்டு கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சரினாலும் மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.