• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நெறிப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் செயலணியொன்றை நியமித்தல்
- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் நிலைமை முடிவடைந்ததன் பின்னர் இந்த மாகாணங்களில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு பல கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. ஆயினும், இந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயத்துவதற்கு பொருட்டு இந்த கருத்திட்டங்களிள் போதுமான தாக்கத்தை செலுத்தியுள்ளமை அவதானிக்கப்படவில்லை. ஆதலால், அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நெறிப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்குமாக அவருடைய தலைமையில் மாண்புமிகு பிரதம அமைச்சர், மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், இராணுவம் மற்றும் இலங்கை பொலிசின் குறித்த மாகாணங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் உரிய ஏனைய தரப்பினர்கள் ஆகியோர்களைக் கொண்ட செயலணியொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.